இனி திருச்சியில் படங்கள் ரிலீஸ் இல்லை - ’கோமாளி' பட பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் பணம் பறிக்க செய்கின்ற இந்த கட்ட பஞ்சாயத்துகளினால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Karthick S | news18
Updated: August 13, 2019, 8:33 PM IST
இனி திருச்சியில் படங்கள் ரிலீஸ் இல்லை - ’கோமாளி' பட பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
கோமாளி படத்தில் ஜெயம் ரவி
Karthick S | news18
Updated: August 13, 2019, 8:33 PM IST
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் படத்தை வெளியிடக் கூடாது என ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட சக்திவேல் என்ற விநியோகஸ்தர்தான் கோமாளி படத்தையும் வெளியிடுகிறார். மிஸ்டர் லோக்கல் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை அவர் ஈடு செய்ய வேண்டும் என கூறி திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கோமாளி படத்தை திருச்சி மாவட்டத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டதிற்கு உட்பட்ட ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள், வருகின்ற 15-ம் தேதி வெளியாக இருக்கின்ற "கோமாளி" திரைப்படத்தினை திருச்சி ஏரியாவில் வெளியிடமாட்டோம் என்று கூறியது சம்பந்தமாக இன்று தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.


இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, சிங்காரவேலன், நித்தின் சத்யா, ஜே.எஸ்.கே சதீஸ்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோமாளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திருச்சி மாவட்டத்தில் மட்டும் கோமாளி திரைப்படத்திற்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. பணம் பாக்கி எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கின்ற தன்னிடம் பணம் கேட்பது எந்த நியாயமும் இல்லை என்று கூறினார்.

ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் பணம் பறிக்க செய்கின்ற இந்த கட்ட பஞ்சாயத்துகளினால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் திருச்சி பிரான்சிஸ் ,மீனாட்சி சுந்தரம் ,ராதா, மீனா போன்றோர் மீது நாளை முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

Loading...

இந்த விவகாரத்தில் நாளை மாலைக்குள் சம்பந்தப்பட்டவர்கள் பேசி சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்துக்கு குவியும் பாராட்டுகள்!

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...