ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏஜிஎஸ் நிறுவனத்தில் கோமாளிப்பட இயக்குனர்!

ஏஜிஎஸ் நிறுவனத்தில் கோமாளிப்பட இயக்குனர்!

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனக்குப் பொருத்தமான கதையை தயார் செய்து தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்து கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன், அவரே ஹீரோவாக நடிக்கயிருக்கிறார், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கிறது என இரு தினங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் சின்ன திருத்தம். படத்தை தயாரிப்பது ஸ்டுடியோ கிரீன் அல்ல, ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்.

  கோமாளி படம் வெளியாகி வெற்றி பெற்ற போது, அப்படத்தின் இயக்குனர் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தனர். ஆனால், அது அறிவிப்போடு நின்றது. படம் முன்னோக்கி நகரவில்லை. இந்நிலையில் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனக்குப் பொருத்தமான கதையை தயார் செய்து தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். கோமாளி படத்திலும் இவர் சின்ன வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  படத்தின் கதைப் பிடித்துப்போக, ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. நான்தான் ஹீரோ என்ற பிரதீப்பின் டிமாண்டையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர், காரணம் கதை. இன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதனின் படத்தை தயாரிப்பதை உறுதி செய்துள்ளார்.

  படம் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema