ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்... எதிர்காலத்தில் அவருடைய படத்த இயக்க வாய்ப்பு உள்ளது - சீக்ரெட்டை உடைத்த பிரதீப்!

விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்... எதிர்காலத்தில் அவருடைய படத்த இயக்க வாய்ப்பு உள்ளது - சீக்ரெட்டை உடைத்த பிரதீப்!

விஜய் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

விஜய் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு கதை சொல்லுவதுதான் அடுத்த திட்டம் என்று இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன், எதிர்காலத்தில் அவருடைய படத்த இயக்க வாய்ப்பு உள்ளது என்று சீக்ரெட்டை உடைத்து பேசியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தற்போது தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.

பிரதீப்பின் இந்த லவ் டுடே  படம் ஆப் (அ) லாக் என்ற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... மனைவியுடன் வந்து பிரின்ஸ் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் - உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு கதை சொல்லுவதுதான் அடுத்த திட்டம் என்று இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘கோமாளி’ படம் வெளியான உடனேயே விஜய்யிடம் ஒரு கதையை கூறியதாகவும், படத்தின் அடிப்படை ஸ்கிரிப்டை விஜய் விரும்பியதாகவும் அவர் கூறினார். மேலும் வாய்ப்பு கிடைத்தால் விரைவில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் பிரதீப் கூறியுள்ளார்.

‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay