சென்சாரில் கட் செய்த காட்சிகளை வெளியிட்ட கோமாளி படக்குழு!

சென்சாரில் கட் செய்த காட்சிகளை வெளியிட்ட கோமாளி படக்குழு!
கோமாளி
  • News18
  • Last Updated: September 12, 2019, 7:47 PM IST
  • Share this:
தணிக்கையின் போது வெட்டப்பட்ட காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளது கோமாளி படக்குழு.

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக பேசியுள்ள கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.


படிக்க: கோமாளி படத்தில் விஜய் பற்றிய வசனம் ஏன்? - ஷாரா பதில்!

படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன.

படிக்க: பெண் குழந்தை பிறந்ததை அறிவித்த பிரபல தமிழ் நடிகை - குவியும் வாழ்த்துகள்!இந்நிலையில் தற்போது படத்தில் சென்சாருக்கு முன்னும் பின்னும் காட்சிகளில் நடத்தப்பட்ட மாற்றங்களை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் சிம்புவை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், தனுஷை மதுரை தம்பதி சொந்தம் கொண்டாடிய விவகாரம் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.வீடியோ பார்க்க: இஸ்ரோ சிவனின் கதை!

First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading