ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பரபரப்பான கட்டத்தில் கலர்ஸ் தமிழ் உள்ளத்தை அள்ளித்தா சீரியல்

பரபரப்பான கட்டத்தில் கலர்ஸ் தமிழ் உள்ளத்தை அள்ளித்தா சீரியல்

உள்ளத்தை அள்ளித்தா

உள்ளத்தை அள்ளித்தா

இக்கதை தமிழ் என்ற ஆட்டோ ராணியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் உள்ளத்தை அள்ளித்தா சீரியல் அடுத்தடுத்த திருப்பங்களை நோக்கி நகர்கிறது. 

குடும்பத்திற்காக உழைத்து, சம்பாதித்து காப்பாற்றும் முதன்மை நபராக ஆண்களே இருக்கின்றனர் என்ற சமூக கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து மாற்றுகின்ற ஒரு முயற்சியாக, உள்ளத்தை அள்ளித்தா எனும் நெடுத்தொடரை டெலிகாஸ்ட் செய்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல்.

இக்கதை தமிழ் என்ற ஆட்டோ ராணியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. ஆட்டோ ஓட்டுனரான தமிழ் என்ற இந்த இளம்பெண், தனது பணியின் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் கடுமையாக உழைக்கின்ற அதே வேளையில், அதற்காக தனது உறவுகளை விட்டுக்கொடுக்கவோ, காயப்படுத்தவோ தயாராக இல்லை. கடமையுணர்வும், தன்மான உணர்வும் கொண்ட இந்த இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி இரு வெவ்வேறு உலகங்கள் மற்றும் கருத்தியல்களின் முரண்களையும், மோதல்களையும் விவரிக்கிறது.

கதாநாயகியின் அக்கா காவ்யா, தனது ஜாதகத்தை (ஆஸ்ட்ரோ குண்டலினி) கதாநாயகி தமிழின் பிறந்த தேதியோடு போலியாக மாற்றுகிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தவிர்ப்பதற்காகவும், தனது காதலன் ஆதித்யாவுடன் ஓடிப்போவதற்காகவும் அவர் இதைச் செய்கிறார். ஆனால் பின்னர் பணக்கார தொழிலதிபர் சந்தோஷை (ஹீரோ) சந்தித்த பிறகு மனம் மாறுகிறார். தன் காதலன் ஆதித்யாவிற்கு பதிலாக சந்தோஷுடன் செட்டிலாக விரும்புகிறாள்.. சந்தோஷின் குடும்பம் அவர்களின் ஜாதகப் பொருத்தத்தால் தங்கள் ஸ்டேட்டஸில் இருந்து இறங்கி வருகிறார்கள்.

10 வருட திருமண வாழ்க்கை... முதல் குழந்தையை வரவேற்க தயாராகும் ராம் சரண் - உபாசனா தம்பதி!

இதற்கிடையில் ஆதித்யா, காவ்யாவிடம் கண்ணீர் விட்டு அழுகிறான். அவனுக்கு காவ்யா என்ன பதில் சொல்வாள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சந்தோஷுடன் ரைடு போகும் தமிழ், ஊழியர் உறவு பற்றி அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அவர்களை ஒன்றாகப் பார்த்த காவியா கவலைப்படுகிறாள். காவ்யாவின் திருமணம் நெருங்கிவிட்டதால், முழு குடும்பமும் பணத்திற்கு சிரமப்படுகின்றனர், ஆனால் காவ்யாவோ தமிழின் ஆட்டோவை விற்க திட்டமிடுகிறாள். இதற்கு தமிழின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள உள்ளத்தை அள்ளித்தா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்