கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன தெரியுமா? கீழே அதன் விபரங்களை பதிவிடுகிறோம்.
கிளர்ச்சியும், குதூகலமும் கலந்த நிகழ்ச்சிகளின் மூலம் இந்த வார நாட்களை இனிதானதாக ஆக்குவதற்கு கலர்ஸ் தமிழ் தயார்நிலையில் இருக்கிறது. பாடுவதற்கு சிரமமான பஜனைப் பாடல்களை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுகின்ற தெய்வீக நிகழ்ச்சி முதல், முன்னணி நட்சத்திரங்களின் மெய்மறக்கச் செய்யும் பெர்ஃபார்மென்ஸ் வரை உங்களை மகிழ்விக்க வருகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.
5-வது முறை திருமணம் செய்து கொண்ட ஆஸ்கர் விருது நடிகர்!
மாபெரும் இறுதிப்போட்டிக்கான உற்சாகம் பன்மடங்கு அதிகரித்து வருகின்ற நிலையில், பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடு, அக்குழுக்களிடமிருந்து மிகச்சிறந்த இசைத்திறனை வெளிக்கொணர்கிறது. மராத்தி மொழியில் அபாங் சுற்றில் பாடுவதிலிருந்து, இந்தி மொழியில் மிக அரிதான பஜனைப் பாடல்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துவது வரை, கௌரவம் மிக்க இவ்விருதை வெல்வதற்கான யுத்தம் இப்போது இன்னும் பெரிதாக உருவெடுத்திருக்கிறது.
டாக்டர். ஆர். கணேஷ் மற்றும் திருமதி. மஹதி ஆகிய முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் நடுவர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். தங்களது சிறப்பான கருத்துகளை வழங்கி, சிறப்பான திறனை வெளிப்படுத்த நடுவர்கள் வழிகாட்டி போட்டியாளர்களை தயார் படுத்தி வருகிறார்கள்.
Cook With Comali Pugazh: ’ஷங்கர் அலுவலகத்திலிருந்து வந்த அந்த ஃபோன்…’ உருக்கமான குக் வித் கோமாளி புகழ்
முழுமையான பொழுதுபோக்கும், குதூகலமும் வேண்டுமென்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நிகழ்ச்சியான, கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் உங்கள் மனதின் விருப்பத்தை முழுமையாக பூர்த்திசெய்யும். இதயத்தை திருடாதே மற்றும் உயிரே ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திர பட்டாளம், கண்கவர் நடனங்கள் மற்றும் விளையாட்டுகளின் வழியாக பார்வையாளர்களை கட்டிப்போடுவது நிச்சயம். இந்நிகழ்ச்சி, பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களையும் குதூகலத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் சிஎஸ்கே நிகழ்ச்சியில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் முல்லை மற்றும் கோதண்டம் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்