• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Colors Tamil: கலர்ஸ் தமிழில் இந்த வாரம் ஆன் மரியா மற்றும் ராஜாவுக்கு செக்!

Colors Tamil: கலர்ஸ் தமிழில் இந்த வாரம் ஆன் மரியா மற்றும் ராஜாவுக்கு செக்!

கலர்ஸ் தமிழ் சண்டே சினி காம்போ

கலர்ஸ் தமிழ் சண்டே சினி காம்போ

உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் த்ரிலிங் திரைப்படமான ராஜாவுக்கு செக் படத்தை சாய் ராஜகுமார் இயக்கியுள்ளார்.

  • Share this:
    தொலைக்காட்சியில் முதல் முறையாக ’ஆன் மரியா’ மற்றும் ’ராஜாவுக்கு செக்’ ஆகிய இரண்டு சிறப்பு திரைப்படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சண்டே சினி காம்போவில் இந்தவார இறுதியில் வெற்றிப்படங்களான ஆன்மரியா மற்றும் ராஜவுக்கு செக் ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்பாகிறது.  ஸ்பெஷல் பார்ட்னராக (Special Partner) தஞ்சாவூர், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வழங்கும் ஆன்மரியாவை ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட், 2021 அன்று மதியம் 1 மணிக்கும், ராஜவுக்கு செக் படத்தை மாலை 4 மணிக்கும் கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

    மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆன்மரியா படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாரா அர்ஜூன், சன்னி வெய்ன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை 10 வயது ஆன்மரியா (சாரா அர்ஜுன்) மற்றும் அவரது பி.டி. மாஸ்டருக்கு பாடம் கற்பிக்க பணியமர்த்தப்பட்ட கிரிஷ், (சன்னி வெய்ன்) இடையிலான நட்பு பற்றியதாகும். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் மீதி கதையாகும். துல்கர் சல்மான் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் த்ரிலிங் திரைப்படமான ராஜாவுக்கு செக் படத்தை சாய் ராஜகுமார் இயக்கியுள்ளார். தங்களை சிறையில் அடைத்ததற்காக போலீஸ்காரரின் மகளை கடத்தி அவரை பழிவாங்கும் 4 குற்றவாளிகளைப் பற்றிய கதை இதுவாகும். அவர் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை. இந்தப் படத்தில் சேரன், இர்பான் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே, சரயு மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், நந்தனா வர்மா துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், இந்த ஞாயிற்றுக்கிழமை, 8-ம் தேதி மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த 2 திரைப்படங்களையும் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: