சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு

சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் இந்தவார எபிசோடில் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கருடன் பன்முகத்திறன் கொண்ட நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் கலந்துரையாடுகிறார்.

சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு
சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சி
  • Share this:
கலர்ஸ் தமிழ் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு, ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு விருந்தினர் பங்கேற்றுவருகிறார். நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் ஆகிய இருவரும் நகைச்சுவையோடு, அர்த்தமுள்ள, சிந்தனையைத் தூண்டும் உரையாடலில் ஈடுபடுவதைக் காண தயாராகுங்கள்.

இந்த அற்புதமான நிகழ்ச்சியை நீங்கள் தவறாமல் காணவேண்டும் என்பதற்கான மூன்று அடிப்படை காரணங்கள் இதோ:

இன்றைய யுகத்தில் உறவுகள்:


கடந்த கால நினைவுகளுக்கு பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்லும் வகையில் அவரது டிரேட்மார்க் மிமிக்ரியான திரு முருக கிருபானந்த வாரியார் குரலில் சின்னி ஜெயந்த் இந்த உரையாடலை உற்சாகமாக தொடங்குகிறார். சில நேரங்களில் உறவுகள் குறுகிய காலமே தற்காலிகமாக இருப்பதைப் போல் தோன்றுகிற இந்த நவீன உலகில், இளம் தம்பதியர் இடையே காணப்படுகிற உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் கேள்விக்கனைகளை சின்னி ஜெயந்த் தொடுக்கிறார்.

இது குறித்து ஆர்வமும், வியப்பும் தருகிற ஒரு புதிய கண்ணோட்டத்தை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதிலாக வழங்குகிறார். அதைத் தொடர்ந்து இந்த காலத்தில் இளந்தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சற்றே விரிவாகவே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கமளிக்கிறார்.

மகிழ்ச்சியை தேடி கண்டறிதல்:அதற்குப் பிறகு, வாழ்க்கை அமைதி மற்றும் மகிழ்ச்சி போன்ற இதுவரை இடம்பெறாத புதிய தலைப்புகள் இவர்களது உரையாடலில் இடம்பெறுகின்றன. வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து நிற்கிற மகிழ்ச்சி நிலையை அடைவது மீது ஒரு ஆர்வத்தை கிளப்பும் ஒரு கேள்வியை சின்னி ஜெயந்த் முன்வைக்க, சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவதற்கான ஒரு காரணமாக அல்லது மகிழ்ச்சியை வழங்குபவராக இருப்பதன் மூலம் இந்த ஆனந்த நிலையை ஒருவரால் பெறமுடியும் என்று குருதேவ் பதிலளிக்கிறார்; சுவாரஸ்யமான கருத்துகளையும், கதைகளையும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இது தொடர்பாக பகிர்ந்துகொள்கிறார்.

ஆன்மிகம் எதிர் சமய நம்பிக்கை:

வாழ்க்கையில் ஆன்மிகம் மற்றும் சமய கோட்பாடுகளை வேறுபடுத்தி காண்பது மீது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வழிகாட்டலையும், ஆலோசனையையும் சின்னி ஜெயந்த் கோருகின்றபோது இந்த உரையாடல் ஆழமான சிந்தனைகளின் உச்சத்தை எட்டுகிறது. கற்றல் மற்றும் கற்றலிலிருந்து விடுபடுதலுக்கான ஆண்டுகள் பற்றி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசுகின்றபோது இந்த ஆர்வமூட்டும் கண்ணோட்டங்களை நீங்கள் மனதில் உள்வாங்கும்போது ஆழ்ந்த கருத்துக்களோடு குதூகலமூட்டும் உணர்வையும் நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் நடைபெறும் நகைச்சுவை கலந்த இந்த உரையாடலை கண்டுமகிழ நவம்பர் 1ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு தவறாது கல்ர்ஸ் தமிழ் டிவியைப் பாருங்கள்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading