Colors Tamil: 4 சீரியல்கள் 2 பிரமாண்ட மகா சங்கம நிகழ்ச்சி!

கலர்ஸ் தமிழ் சீரியல்

இவ்விரு நிகழ்ச்சிகளில்லும் காதல், அன்பு, வெறுப்பு, மற்றும் பழிவாங்குதல் போன்ற பல்வேறு உணர்ச்சிமிக்க தருணங்கள் இடம்பெறவுள்ளன.

  • Share this:
    திங்கள் முதல் சனிவரை இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பு நிறைந்த தொடர்களை பார்த்து ரசியுங்கள்.

    தமிழகத்தின் முக்கிய பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக அம்மன் - மாங்கல்ய தோஷம், இதயத்தை திருடாதே - சில்லுனு ஒரு காதல் ஆகிய தொடர்களை ஒன்றிணைத்து இரண்டு பிரமாண்ட மகாசங்கமம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

    இவ்விரு நிகழ்ச்சிகளில்லும் காதல், அன்பு, வெறுப்பு, மற்றும் பழிவாங்குதல் போன்ற பல்வேறு உணர்ச்சிமிக்க தருணங்கள் இடம்பெறவுள்ளன. இந்த மகாசங்கமம் நிகழ்ச்சிகளானது மே 10, 2021 தொடங்கி இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகைகளும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுமான மகேஸ்வரி மற்றும் வைகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இது குறித்து சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகேஸ்வரி கூறுகையில், “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அம்மன் மற்றும் மாங்கல்ய தோஷம் ஆகிய 2 தொடர்களின் மகாசங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு த்ரிலிங்கான அனுபவத்தை தந்தது. இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். நான் நடித்திருக்கும் சிறிய கதாபாத்திரமானது மகாசங்கமம் நிகழ்ச்சியில் மிகுந்த திருப்பத்தை ஏற்படுத்தும். மேலும் எனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிக்கும் விதமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

    வைகா ரோஸ் கூறுகையில், “மீண்டும் நான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மகாசங்கமம் நிகழ்ச்சியான அம்மன் மற்றும் மாங்கல்ய தோஷம் ஆகிய தொடர்களில் இணைந்திருப்பது மிகவும் அற்புதமான அனுபவம். சம்பந்தப்பட்ட கதைக்களம் மற்றும் சிறந்த நடிகர், நடிகைகளுடன் நானும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடர்களின் பார்வையாளர்கள் மகாசங்கமத்தில் எனது கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சிகளை பார்த்து மகிழுங்கள்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: