மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்டதையடுத்து கல்லூரியின் மாணவர் சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் தங்கம் திரைப்பட புரொமோஷனின் போது, அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துகொண்டதற்காக அக்கல்லூரியின் மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டுள்ளது. சமூக ஊடகப் பதிவில், இந்த சம்பவம் வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கல்லூரி யூனியன் கூறியுள்ளது. இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக பரிசீலிப்பதாக அந்த அறிக்கையில் யூனியன் உறுதியளித்துள்ளது.
“இன்று (18/01/2023) சட்டக் கல்லூரியில் நடைபெற்ற யூனியன் தொடக்க விழாவில் திரைப்பட நடிகைக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது மிகவும் வருந்தத்தக்கது. சம்பவத்தின் போது, யூனியன் அதிகாரி அத்தகைய நடத்தையைத் தடுக்க முயன்று சங்கத்தின் சார்பாக வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை சந்தித்த சிரமத்திற்கு கல்லூரி யூனியன் மனதார வருந்துகிறது. யூனியன் இதுபோன்ற பிரச்னையை மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி வெளிவரவிருக்கும் தங்கம் திரைப்படத்தை புரொமோட் செய்ய எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரிக்கு வந்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அவருடன் வினீத் ஸ்ரீனிவாசனும் வந்திருந்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் அவரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டார்.
View this post on Instagram
அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார். மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானவையடுத்து, இணையத்தில் கண்டனங்கள் வலுத்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.