ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் விறுவிறுப்பான காஃபி திரைப்படம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் விறுவிறுப்பான காஃபி திரைப்படம்!

காஃபி திரைப்படம்

காஃபி திரைப்படம்

இந்தப் படத்தில் நிஜ வாழ்க்கை ஜோடியான நடிகர் ராகுல் தேவ் மற்றும் முக்தா முதல் முறையாக தமிழ் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக காஃபி திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் டிவி.

  பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகை இனியாவின் நடிப்பில் உருவான காஃபி திரைப்படத்தை, Viacom18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ், இந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பாகவிருக்கிறது.

  ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்து, ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை நேர்த்தியாக சித்தரிக்கும் இந்த அதிரடி திரில்லரை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நிஜ வாழ்க்கை ஜோடியான நடிகர் ராகுல் தேவ் மற்றும் முக்தா முதல் முறையாக தமிழ் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

  சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் போலீஸாக ஆசைப்படுகிறார் சத்யா (நடிகை இனியா). இருப்பினும், சூழ்நிலைகள் அவளை ஒரு வாகன ஓட்டுநராக மாற்றி விடுகின்றன. இந்தத் தொழிலின் மூலம், அவள் தன் ஒரே சொந்தமான அவளுடைய சகோதரன் கார்த்திக்கிற்காக வேலை செய்கிறாள். ஒரு நாள் கார்த்திக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆனால் அவனது மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே, அவன் நினைத்தற்கு மாற்றாக மனித கடத்தல் கும்பலிடம் சிக்கி கடத்தப்படுகிறான். சத்யா விரைவில் தனது சகோதரனின் இருப்பிடத்தைக் கண்டறிய தனது தேடலை தொடங்குகிறாள். சத்யா தன் சகோதரனைக் காப்பாற்ற முடியுமா? படத்தின் வில்லன் விக்ரமுடன் (நடிகர் ராகுல் தேவ்) சண்டையிட்டு தோற்கடிப்பாளா என்பது தான் மீதிக்கதை.

  103 வயது சித்தியிடம் பேசி மகிழ்ந்த எஸ்.ஏ.சந்திர சேகர்!

  இது குறித்து நடிகை இனியா கூறுகையில், "இது ஒரு அற்புதமான அனுபவம், குறிப்பாக ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவம் எனக்கு கிடைத்தது. சத்யா போன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் உள்ளன, ஆனால் காபி பார்வையாளர்களுக்கு இன்னும் ஒரு படி அனுபவத்தை உயர்த்துவது உறுதி” என்றார்.

  இந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது வரும் நவம்பர் 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில் காஃபி படத்தை கண்டு களியுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்