முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நீளம் குறைக்கப்பட்ட கோப்ரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு…

நீளம் குறைக்கப்பட்ட கோப்ரா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு…

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா திரைப்படம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடியதாக நீளம் குறைக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோப்ரா படத்தின் நீளம் குறைக்கப்பட்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக விக்ரம் நடித்த கோப்ரா படம் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான படங்கள் 2.30 -2.45 மணி நேரங்களாக வெளியிடப்பட்டு வந்த நிலையில், கோப்ரா படம் 3மணி நேரம் 3 நிமிடங்கள் 3 விநாடிகள் ஓடக் கூடியதாக எடிட் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் வெளியானது.

படத்தில் அதிக கன்டென்டுகள் இருக்கும் என்பதால், இந்த நீளம் சரியானதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். படக்குழுவினரும் படத்தின் நீளம் பாசிடிவாக அமையும் என்று கருதினர்.

அடுத்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…

ஆனால் இவற்றுக்கு மாறாக, படத்தின் நீளமே அதற்கு பிரச்னையாக மாறியது. படத்தின் வேகத்தை குறைக்கும் வகையில் அதிக காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதனால் படம் திருப்தி அளிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து படம்வெளியான அன்றைக்கே படத்தின் நீளத்தை குறைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இதன்பின்னர் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடியதாக நீளம் குறைக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீளம் குறைக்கப்பட்ட பின்னர் படம் விறுவிறுப்பாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனை முதலிலேயே செய்திருக்கலாமே என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர். கோப்ரா படத்தில் விக்ரம் 2 கேரக்டர்களில் நடித்துள்ளார். மூளையைப் பயன்படுத்தி மிகவும் பிரபலமாக இருக்கும் நபர்களை விக்ரம் கொலை செய்யும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

' isDesktop="true" id="795698" youtubeid="uQS3IU5xkJY" category="cinema">

top videos

    பல லாஜிக் ஓட்டைகள், பலவீனமான ஃப்ளாஷ்பேக் , அழுத்தமற்ற காதல் கதைகள், படத்தின் நீளம் உள்ளிட்டவை கோப்ரா படத்தின் வசூலுக்கு தடைக்கற்களாக அமைந்து விட்டன. அடுத்த 2 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், ரசிகர்களை கோப்ரா ஈர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம், வசூலை பாதிக்கும் வகையில் பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாதது கோப்ரா படத்திற்கு அட்வான்டேஜாக அமைந்து விட்டது.

    First published:

    Tags: Cobra Movie