Home /News /entertainment /

விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயன்ட்…

விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயன்ட்…

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

Cobra Movie Update : ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் 1 மற்றும் 2ம் பாகங்களில் இடம்பெற்ற ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

    தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கோப்ரா படத்தை, தமிழ்நாட்டில் வெளியிடும்  உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 7 அல்லது அதற்கும் அதிகமான தோற்றங்களில் விக்ரம் நடித்திருப்பதாக கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க - என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்! 

    கடைசியாக விக்ரமுக்கு வெளியான படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படம் மெகா ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.



    இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோப்ரா படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதியின்ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.



    கடைசியாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட விக்ரம், பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த ஹிட்டிற்கு ரெட்ஜெயன்ட் தயாராகியுள்ளது.

    இதையும் படிங்க - ‘பள்ளிகளில் ஒழுக்க நெறிமுறை வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்’ - இயக்குனர் எஸ்பி முத்துராமன் வலியுறுத்தல்... 

    ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் 1 மற்றும் 2ம் பாகங்களில் இடம்பெற்ற ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி