ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோப்ரா

கோப்ரா

கோப்ரா படமும் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா.  இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். கோபுரா படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ரஷ்யா  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!

இந்த திரைப்படத்தில் விக்ரம் கணித மேதையாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.  அதேபோல் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி சில வருடங்கள் ஆனாலும், கதை முழுமையாக எழுதப்படாததால் படப்பிடிப்பிற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கின. கோப்ரா  திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் விதமாக விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சிம்புவை திருமணம் செய்வேன் என அடம்பிடித்த நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதி!

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.  அவர் இசையில் வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  அதேபோல் படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.  இதனால் கோப்ரா படமும் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vikram, AR Rahman, Kollywood, Tamil Cinema