Home /News /entertainment /

கோப்ரா படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பம்…

கோப்ரா படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பம்…

விக்ரம்

விக்ரம்

ஏ.ஆர். ரகுமான் இசையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கோப்ரா’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணி முதல் ஆரம்பமாகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படம் திரைக்கு வருவதால், அடுத்து வரும் 5 நாட்களுக்கு இப்படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி, மிருணாளினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. 2 வாரங்களுக்கு முன்பாக படம் வெளியாகும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் வெளியாகும் என்று கடைசியாக அறிவிக்கப்பட்டது.

    என் அறையிலிருந்து அழகான புதாபெஸ்ட்... படங்களைப் பகிர்ந்த இளையராஜா!

    இதையொட்டி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை மறுநாள் கோப்ரா படம் வெளியாக உள்ளது. மொத்தம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 வினாடிகள் ஓடக்கூடிய கோப்ரா படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    ஏ.ஆர். ரகுமான் இசையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    கோப்ரா படத்தில் சுமார் 10 கெட்டப்புகளில் விக்ரம் இடம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது.

    தற்போது தமிழக திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம், டைரி உள்ளிட்ட படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. கோப்ரா படத்திற்கு வரவேற்பு கிடைத்தால் பெரும்பாலான திரையரங்குகளை கோப்ரா ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cobra Movie

    அடுத்த செய்தி