Home /News /entertainment /

கோப்ரா படம் வெளியாகும் முன்னரே அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் இணையும் விக்ரம்...

கோப்ரா படம் வெளியாகும் முன்னரே அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் இணையும் விக்ரம்...

அஜய் ஞானமுத்து - விக்ரம்

அஜய் ஞானமுத்து - விக்ரம்

அஜய் ஞானமுத்து தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அதற்கான முன் தொகையும் அவர் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

கோப்ரா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரம் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைகின்றனர்.

டிமான்டி காலனி,  இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோப்ரா படத்திற்கான வேலைகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.  ஆனால் இயக்குநரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் படத்தின் வேலைகள் முடிய காலதாமதமானதாக படக்குழுவின் தரப்பில் கூறப்பட்டது. அதை இயக்குநர் மறுத்தார்.

சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

இந்த நிலையில் கோப்ரா திரைப்படத்தை ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.  ஆனால் அந்த தேதியிலும் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை இயக்குநர் முடித்துக் கொடுக்காததால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது என கூறப்படுகிறது.  இந்த நிலையில் அஜய் ஞானமுத்து தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அதற்கான முன் தொகையும் அவர் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இளையராஜா இசைப்பள்ளியையும், கமல் ஹாசன் நடிப்புப் பள்ளியையும் துவங்க பிரபல இயக்குநர் விருப்பம்!

ஏ.ஜி.எஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க உள்ளார். கோப்ரா திரைப்படத்தை தொடர்ந்து உடனடியாக மீண்டும் விக்ரமுடன் அஜய் ஞானமுத்து கூட்டணி அமைக்கிறார்.

பெரும்பாலும், ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த படத்தில் இடம்பெற்ற இயக்குனர், நடிகர் மீண்டும் இணைவார்கள். ஆனால், இங்கு கோப்ரா படம் வெளியாகும் முன்னரே அஜய் ஞானமுத்துவும், அடுத்த படத்தில் இணைந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 
Published by:Musthak
First published:

Tags: Actor Vikram

அடுத்த செய்தி