Home /News /entertainment /

Cobra: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட கோப்ரா குழுவினர் ட்விட்டர் ஸ்பேசஸில் ரசிகர்களுடன் உரையாடல்!

Cobra: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட கோப்ரா குழுவினர் ட்விட்டர் ஸ்பேசஸில் ரசிகர்களுடன் உரையாடல்!

கோப்ரா திரைப்படம்

கோப்ரா திரைப்படம்

ஆர்.ஜே.ஷா தொகுத்து வழங்கும் இதில் நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் உள்ளிட்ட குழுவினர் கலந்துக் கொண்டு உரையாடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாளை விக்ரமின் கோப்ரா திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாடி வருகின்றனர்.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அவர் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தவிர கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார்.

    இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் திருச்சி, கோவை, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூர் என பல இடங்களுக்குச் சென்று கோப்ரா படத்தை புரொமோட் செய்தார் விக்ரம். இந்நிலையில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இன்று மாலை 6 மணியிலிருந்து கோப்ரா குழுவினர் ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாடி வருகின்றனர். ஆர்.ஜே.ஷா தொகுத்து வழங்கும் இதில் நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இர்பான் பதான் உள்ளிட்ட குழுவினர் கலந்துக் கொண்டு உரையாடி வருகின்றனர்.

    ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பல இடங்களில் ரசிகர்களின் அன்பில் திளைத்த விக்ரம், அவர்கள் அனைவருடனும் உரையாட முடியாமல் போனதால் இயக்குநருடன் இணைந்து இந்த டிவிட்டர் ஸ்பேசஸ் ஐடியாவை கொண்டு வந்ததாகவும், இதில் ரசிகர்கள் அனைவரும் தன்னுடன் உரையாட முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார் விக்ரம்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vikram

    அடுத்த செய்தி