Home /News /entertainment /

கடைசி நேரத்தில் கோப்ரா படத்திற்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்.. படக்குழு ஹேப்பி!

கடைசி நேரத்தில் கோப்ரா படத்திற்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்.. படக்குழு ஹேப்பி!

கோப்ரா

கோப்ரா

கோப்ரா படத்திற்கு ரிவைசிங் கமிட்டி யுஏ சான்றிதழ் வழங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கோப்ரா திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது கௌதமி தலைமையிலான குழு.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த குழுவினர் கோப்ரா படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினர். இதனால் தணிக்கை முடிந்ததை அறிவித்த படக்குழு என்ன சான்றிதழ் என்பதை கூறவில்லை.

மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

மேலும் தயாரிப்பு நிறுவனம் யு/ஏ சான்றிதழ் பெற முயற்சித்தது. இருந்த போதிலும் படத்தில் இடம்பெறும் நாயகனின் கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி 'ஏ' சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என தணிக்கை குழுவினர் கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து கௌதமி தலைமையிலான ரிவைஸில் கமிட்டிக்கு படத்தை அனுப்பி வைத்தனர். அந்த குழு தற்போது கோப்ரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vikram, Cobra Movie, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி