கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள அதிரா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இந்தப் படத்தின் "தும்பி துள்ளல்" பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது.
கடும் விஷம் கொண்ட கிங் கோப்ரா பாம்பு எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவது போல, எதிர்பாராமல் செயல்படும் பல கதாப்பாத்திரத்தில் விக்ரம் இதில் நடித்துள்ளார். இப்படி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார்.
புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்... பாராட்டி தள்ளிய அன்புமணி ராமதாஸ்!
கோப்ரா திரைப்படம் குறித்து முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அஜய் ஞானமுத்து, “ரஷ்ய அதிபர் புதினின் மாளிகையில் பல்வேறு காட்சிகள் படாமாக்கப்பட்டன. பாதுகாப்பு மிகுந்த ஒரு நாட்டின் அதிபர் மாளிகையிலேயே ஷூட்டிங் நடத்திய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. சினிமா காட்சிகள் எடுப்பதற்கு இந்தியாவில் உள்ளது போல கடும் கட்டுப்பாடுகள் ரஷ்யாவில் இல்லாதது இந்த படத்தை விரைவாகவும், எளிமையாகவும் எடுப்பதற்கு ஏதுவாக இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள அதிரா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.