ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவி துர்கா கேட்டதற்கு ஷாக்கான முதல்வர் ஸ்டாலின்.. மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்!

மனைவி துர்கா கேட்டதற்கு ஷாக்கான முதல்வர் ஸ்டாலின்.. மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்!

துர்கா ஸ்டாலின் - முதல்வர் ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் - முதல்வர் ஸ்டாலின்

கடந்த 4 ஆம் தேதி வெளியான லவ்டுடே, காஃபி வித் காதல் ஆகிய 2 படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லவ் டுடே படத்தை பார்த்து விட்டு மனைவி துர்கா கேட்ட கேள்வியால் முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போயுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள கலகலப்பான தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

  பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு, இவானா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் பிரதீப்பும், இவானாவும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல இவானாவின் அப்பா சத்யராஜ் ஒரேயொரு கண்டிஷன் போடுகிறார்.

  இதன்படி தங்களது செல்போனை பிரதீப்பும், இவானாவும் ஒரு நாளைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஏற்று உடனடியாக இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கிறார்கள். இதன்பின்னர் ஏற்படும் சிக்கல்களை சுவாரசியமாகவும், நகைச்சுவை கலந்த விறுவிறுப்புடன் படத்தை தந்துள்ளார் இயக்குனர் பிரதீப்.

  பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்திற்கு மீண்டும் ஷூட்டிங் நடக்கப் போகிறதா? வைரலாகும் புதிய தகவல்

  லவ் டுடே திரைப்படம் முதல் வாரத்தை கடந்து தற்போது 2ஆவது வாரமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துடன் சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த இரு படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

  வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு சிக்கல்… பிரச்னை சரியாக வாய்ப்புள்ளதா?

  இந்த நிலையில் விகடன்  நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் லவ்டுடே படம் குறித்து கூறியதாவது-

  லவ் டுடே படம் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மாவும் சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்கள். பின்னர் இந்த மாதிரி எல்லாரும் செல்ஃபோனை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு நானும் அப்பாவும் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டோம்.

  என்று கூறியுள்ளார்.

  உதயநிதி பகிர்ந்துள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Udhayanidhi Stalin