Home /News /entertainment /

ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார்: நான் இந்த பக்கம் நிற்கிறேன் -கமல்ஹாசன் பேச்சு

ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார்: நான் இந்த பக்கம் நிற்கிறேன் -கமல்ஹாசன் பேச்சு

விக்ரம் படத்தில் கமல்

விக்ரம் படத்தில் கமல்

Vikram audio launch | இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன், ஆனால் தமிழுக்கு ஆபத்து வந்தால் விடமாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  மு.க.ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். நடுவில் ட்ராபிக் செல்கிறது என நடிகர் கமல்ஹாசன் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

  இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் உள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவரும், கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

  அனிருத்தின் இசையில் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடல், ரசிர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து, இரவு 8 மணியளவில் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். குறிப்பாக கமலின் நடிப்பு மற்றவர்களை மிஞ்சும் விதத்தில் உள்ளது.

  இந்நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ’இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால் தமிழுக்கு ஆபத்து வந்தால் விடமாட்டேன். எல்லாம் இணைந்தது தான் இந்தியா. தனியாக பிரித்து வைக்க முடியாது. என் தமிழ் உச்சரிப்புக்கு மூவர் காரணம் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன்.

  அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தாத்தா தொடங்கி பேரன் வரை எங்கள் நட்பு தொடர்கிறது. ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். நடுவில் ட்ராபிக் செல்கிறது. அரசியல் வேறு நட்பு வேறு. எனக்கு போட்டியாளர் ரஜினி. ஆனால் நாங்கள் நண்பர்கள். அதுபோலவே முதல்வருக்கும் எனக்குமான நட்பு.

  நானும் ரஜினியும் நல்ல நட்போடுதான் இருக்கிறோம், நீங்கள் ரசிகர்கள் தான் அடித்துக்கொள்கிறீர்கள்.

  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே. நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்! இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்

  இந்தியாவின் அழகே பன்முகத் தன்மைதான். எல்லோரும் கைகோர்த்தால்தான் இந்தியா. என் வேலை இன்னொரு மொழி ஒழிக என்பதல்ல. தமிழ் வாழ்க என்பதே! அதற்கு யார் எதிராக நின்றாலும், எதிர்க்க வேண்டியது என் கடமை. இந்தி, குஜராத்தி கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தாய் மொழியை விட்டுக் கொடுக்காதீர்கள்’ என்று தெரிவித்தார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Kamal hassan, Vikram

  அடுத்த செய்தி