Home /News /entertainment /

நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சூர்யா, முதல்வர் ஸ்டாலின்

சூர்யா, முதல்வர் ஸ்டாலின்

திரையுலகினர் பெரிதாகக் கருதும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அது ஆங்கில படங்களுக்கான விருதாக இருந்தாலும்,  உலக சினிமா துறையினர் ஆஸ்கார் மீது பெரும் மரியாதை வைத்துள்ளனர். 

  • News18
  • Last Updated :
    ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன.  இதைத்தொடர்ந்து அந்தப் படங்களின் நாயகனான சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார் என  அறிவிக்கப்பட்டுள்ளார்.

    திரையுலகினர் பெரிதாகக் கருதும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அது ஆங்கில படங்களுக்கான விருதாக இருந்தாலும்,  உலக சினிமா துறையினர் ஆஸ்கார் மீது பெரும் மரியாதை வைத்துள்ளனர்.  அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Also read... 20 வருடங்களை நிறைவு செய்த பஞ்சதந்திரம் ஹாலிவுட் படத்தின் காப்பியா?

    சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.  அதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



    இதற்காக நடிகர் சூர்யாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை! என்று அதில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Suriya, CM MK Stalin

    அடுத்த செய்தி