தமிழ்நாட்டின் ’CM விஜய்’... ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்... அடடே விளக்கம்...!

தமிழ்நாட்டின் ’CM விஜய்’... ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்... அடடே விளக்கம்...!
விஜய்
  • News18
  • Last Updated: January 3, 2020, 10:36 AM IST
  • Share this:
தமிழ் நாட்டின் ’CM விஜய்’ என ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Also see... 2019-ன் டாப் 10 வசூல் படங்கள்... பேட்ட, விஸ்வாசம், பிகில் எந்த இடம்..?

இந்நிலையில் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் புதிய சாதனை படைத்தது. வெளியான முதல் 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக #ஹேஷ் டேக்குகளில் டிரெண்டிங் செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் திரைப்படம் பெற்றது.


இந்நிலையில் தமிழகத்தின் ’CM விஜய்’ என்று விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. CM of Tamilnadu' என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.

Also see...
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading