தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்த விருது ரஜினிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்!
தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது நபர் ரஜினி தான். ரஜினியின் விருது வேட்டையை தொடங்கி வைத்தவர் இயக்குநர் மகேந்திரன் தான். அவர் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படம் தான் நடிகர் ரஜினிக்கு முதல் விருதைப் பெற்று தந்தது.
தமிழக அரசின் 6 மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள ரஜினி, இன்று திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதையொட்டி பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், “திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள். திரைவானின்
சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.