Home /News /entertainment /

MK Stalin: 'ஸ்டாலின் தான் வாராரு’ இசையமைப்பாளர் ஃபெலிக்ஸ் திருமணத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin: 'ஸ்டாலின் தான் வாராரு’ இசையமைப்பாளர் ஃபெலிக்ஸ் திருமணத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருமண வரவேற்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருமண வரவேற்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்தப் பாடலை பாடகர் அந்தோணி தாசன் பாடியிருந்தார்.

    நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக-வின் பிரச்சார பாடலாக இடம்பெற்ற ‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடலை இசையமைத்த ஜெரார்டு ஃபெலிக்ஸின் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    கடந்த சட்ட மன்ற தேர்தலில், “ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு, அதுதான் மக்களோட முடிவு” என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடல் ஒலித்தது. ஸ்டாலின் முதல்வரானால் தமிழகத்துக்கு விடியல் பிறக்கும் என்ற வகையில் அமைந்த இந்தப் பாடல் எளிமையாக அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் இருந்தது தான் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்தப் பாடலை பாடகர் அந்தோணி தாசன் பாடியிருந்தார். பாடலுக்கு இசை ஜெரார்டு ஃபெலிக்ஸ்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர் தற்போது பிரேஷிசாந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெரார்டு ஃபெலிக்ஸ் - பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துக் கொண்டனர்.

    அவர்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி, தமிழ் போல் வாழ்கவென வாழ்த்தியதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: MK Stalin, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி