Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்?

பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்?

பொன்னியின் செல்வன் - மு.க.ஸ்டாலின்

பொன்னியின் செல்வன் - மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை வெளியிட உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். 

பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் 2020-ஆம் ஆண்டு தாய்லாந்தில் தொடங்கியது. ஒரு மாதம் படப்பிடிப்பு  நடைபெற்ற நிலையில்,  கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இதனால் ஊரடங்கிற்கு தகுந்தவாறு படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடியும் வரை படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை வெளியிடப்படவில்லை.  இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை கடந்த ஜூலை முதல் வாரம் தஞ்சாவூரில் நடத்த திட்டமிட்டதாக நடிகர் கார்த்தி கூறினார். அதற்காக நடிகர் - நடிகைகளிடம் தேதி கேட்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ஜூலை 4-ம் தேதியில் இருந்து கரிகாலன், வந்திய தேவன், நந்தினி, குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் ஆகிய கதாபாத்திரங்களின் முதல் பார்வைகள் ஒவ்வொரு நாளாக வெளிடப்பட்டது. அத்துடன் ஜூலை 8-ம் தேதி டீசரை வெளியிட்டனர். அந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

டீசர் நிகழ்ச்சியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த லைக்கா நிறுவனம்  திட்டமிட்டது. அதற்காக  சென்னையில் தஞ்சாவூர் அடையாளங்களுடன் செட் அமைத்து விழா நடத்தவும் ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்தத் திட்டம் ஒருசில காரணங்களால் மாறியது. இறுதியில்  நேரு உள்விளையாட்டு அரங்கை தேர்வு செய்துள்ளனர். அங்கு செப்டம்பர் 6-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியுடன் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரை லைக்கா மற்றும் மணிரத்னம் ஆகியோர் அழைத்துள்ளனர். அதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடலை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு பிரபலங்களை அழைக்கும் அதே சமயம் தமிழக முதல்வரை அழைத்துள்ளனர். அவர் கொடுத்த தேதியில் தான் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என கூறுகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை வெளியிட உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நிகழ்ச்சியின் திட்டம் நிறைவேறவில்லை என்றாலும், பாடல் வெளியீட்டு விழா பல முக்கிய பிரலங்களின் முன்னிலையில்  பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
சென்னை போலவே ஐதராபாத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அல்லது சிரஞ்சீவி சிறப்பு விருந்துனர்களாக கலந்துகொள்கின்றனர். மேலும் பெங்களூருவில் நடைபெறும் விழாவில் கர்நாடக முதல்வர் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.
Published by:Shalini C
First published:

Tags: CM MK Stalin, Mani ratnam, MK Stalin, Ponniyin selvan

அடுத்த செய்தி