• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காவலர்களின் தியாகத்தை போற்றும் வீர வணக்க நாள் பாடல்!

காவலர்களின் தியாகத்தை போற்றும் வீர வணக்க நாள் பாடல்!

வீர வணக்க நாள் பாடல்

வீர வணக்க நாள் பாடல்

வீர வணக்கம் பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    காவலர்களின் வீர வணக்க நாளில், ‘வீர வணக்கம்’ பாடலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21-ஆம் தேதி, இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது.

    நாட்டு மக்களை பாதுகாக்கும் பொருட்டு, வெள்ளம், சுனாமி, கொரோனா என பேரிடர் காலத்தில், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து இந்தாண்டின் வீர வணக்க நாளை இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை கான்ஸ்டபிள் சசிகலா மற்றும் பார்வையற்ற பாடகர் திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.



    இதற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐ.பி.எஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: