நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ள இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், மற்றும் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற பிரிகிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவின் நிழல் படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, "இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம்!" என்று பாராட்டி, பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்! #OthaSeruppu-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! #IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!
முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 " எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம் வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4-வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை, இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையே முதல்வரின் பாராட்டு, தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.