Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்!

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்!

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர்

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

அந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வட குழுவினர் அழைத்துள்ளனர். அந்த விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் சினிமா விழாக்களில் பெரிய அளவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் சோழர்களை மையமாக கொண்ட வரலாற்று படம் என்பதால் பொன்னியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

Also read... நடிகர் அர்ஜூனின் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் 2-வது லுக் போஸ்டர் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் பாடல்கள் 6-ம் தேதி வெளியாகும் நிலையில் ஆந்திராவில் செப்டம்பர் 8-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

அந்த விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி அல்லது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.  அதே போல் கன்னடத்தில் நடைபெறும் விழாவிற்கு கர்நாடக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CM MK Stalin, Entertainment, Ponniyin selvan

அடுத்த செய்தி