ஹோம் /நியூஸ் /entertainment /

1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம்.. காலமானார் அரூர்தாஸ்.!

1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம்.. காலமானார் அரூர்தாஸ்.!

ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ்

பாசமலர், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், அன்பே வா உள்ளிட்ட படங்கள் மூலம் திரையுலகில் முத்திரைபதித்தவர் ஆரூர்தாஸ்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பழம்பெரும் திரைப்பட வசனகர்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார்.

  எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதி புகழ்பெற்ற ஆரூர்தாஸ் சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 91 வயதான அவர், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலமானார்.

  அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரூர்தாஸுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். பாசமலர், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வமகன், அன்பே வா உள்ளிட்ட படங்கள் மூலம் திரையுலகில் முத்திரைபதித்த ஆரூர்தாஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை - வசனம் எழுதியுள்ளார்.

  இறுதியாக 2014-ம் ஆண்டு வடிவேல் நடித்து வெளியான தெனாலிராமன் படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். திரையுலகில் தனித்துவமாக திகழ்ந்த ஆரூர்தாஸ், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

  ''மகளிர் சுய உதவி குழு கடன் விரைவில் தள்ளுபடி'' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு 

  அவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வசனங்கள் மூலம் திரையுலகை ஆண்ட ஆரூர்தாஸ் நம்மிடம் இல்லை என்றாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் நிலைத்து நிற்கும் என அதில் தெரிவித்திருந்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Death