Home /News /entertainment /

'சாவர்க்கர் ஓ சாவர்க்கர்’ - ஸ்கூல் ட்ராப் அவுட்டா என்று கேட்ட பாஜக பிரமுகருக்கு சித்தார்த் கொடுத்த ஆதாரம்..

'சாவர்க்கர் ஓ சாவர்க்கர்’ - ஸ்கூல் ட்ராப் அவுட்டா என்று கேட்ட பாஜக பிரமுகருக்கு சித்தார்த் கொடுத்த ஆதாரம்..

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

சுவீடன் நாட்டின் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்குடன் தொடர்புடைய 22 வயதான திஷா ரவியை கடந்த 13-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக "டூல்கிட்" என்ற ஒரு ஆவணத்தை உருவாக்கி அதனை கிரெட்டாவுடன் பகிர்ந்து கொண்டதாக கூறி திஷா மீது தேசத்துரோக வழக்குபபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து ட்விட்டரில் ட்வீட் செய்திருந்த நடிகர் சித்தார்த், ”நண்பர்களுடன் திரைப்படத்துக்குப் போக விரும்பினால், திரையரங்குக்கு போவதற்கு முன்னால் நேரம், ஒன்றுகூடும் இடத்தையெல்லாம் பேசுவீர்கள். இதை டூல் கிட் என்கிறார்கள். இதன் மோசமான பக்கத்தை ஐடி பிரிவுகள் செய்கிறது. உங்களின் விஷமத்தை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.


போராட்டக்காரர்கள் தலைப்பாகை அணிந்தால், காலிஸ்தானியர்களா, பிரியாணி சாப்பிட்டால் ஜிகாதியர்களா, தேவாலயத்தில் கூடினால் மிஷினரிகளா, பாசிச அரசை எதிர்த்து பேச மட்டும் கூடாது என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த ட்வீட்டைக் கண்டு கொந்தளித்த தெலங்கானா பாஜக உறுப்பினர் கருணா கோபால், யார் இவர்? பள்ளிப்படிப்பையாவது முடித்தவரா? ஆதாரமில்லாமல் என்னென்னவோ பேசுகிறார்” என்று ட்வீட் செய்தார். அதற்கு பதிலளித்த சித்தார்த், ”இந்த கருணா கோபால், அவருடைய இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிகழ்வில் கலந்துகொள்ளச் சொல்லி என்னைக் கேட்டபோது நான் பேசினேன். அப்போது நான் முதுகலைப்பட்டதாரியாக இருந்தேன்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கருணா கோபால், எனது பள்ளியில் இருந்து உங்களுக்கு யாராவது அனுப்பியிருப்பார்கள் என்று கூறினார். அதற்கு மறுபடியும் பதிலளித்த சித்தார்த், கருணா கோபால் தனது மெயிலில் இருந்து அழைப்பு அனுப்பியிருக்கும் ஆதாரத்தை வெளியிட்டு ட்வீட் செய்தார்.

ஆதாரத்தை ட்வீட் செய்துவிட்ட்தற்கு பதிலளித்த பாஜக பிரமுகர், ”உங்கள் ரசிகர்கள் அப்பாவியாக இருக்கிறார்கள். அவர்களை உங்கள் இடதுசாரி கருத்துக்களுக்குள் இழுக்கவேண்டாம்” என ட்வீட் செய்தார்.

சாவர்க்கர் ஓ சாவர்க்கர் என கிண்டலடித்த சித்தார்த், ”நீங்கள் தொடங்கினீர்கள் நான் முடித்து வைத்துவிட்டேன்” என டீவிட் செய்துள்ளார்.
Published by:Gunavathy
First published:

Tags: Actor Siddharth, BJP, Delhi farmers, Farmer protest, Karuna Gopal, Toolkit

அடுத்த செய்தி