‘மாஸ்டர்' பட கேமராமேனுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

திரைத்துறையினர் பலரும் சத்யன் சூர்யனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

‘மாஸ்டர்' பட கேமராமேனுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்
ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன்
  • Share this:
மாஸ்டர் பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் இந்திய ஒளிப்பதிவாளர் சமூகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகம் (The Indian Society of Cinematographers) இந்த அமைப்பு ஒளிப்பதிவாளர்களுக்கான சங்கம் அல்ல. 1955-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் அதில் ஏற்கெனவே இருக்கும் ஒருவர் அழைப்பு விடுத்தால் மட்டுமே முடியும்.

ஒளிப்பதிவு மற்றும் ஃபோட்டோகிராஃபியில் சிறந்து விளங்குபவர்களைத் தானாக முன் வந்து அங்கீகரிக்கும் ஒரு சமூகம் தான் ISC. இதில் ஒரு ஒளிப்பதிவாளர் சேர்த்துக் கொள்ளப்பட்டால் அவர் தனது பெயருடன் ISC என்பதை சேர்த்துக் கொள்ளலாம். இந்தியாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கிடைக்கும் கௌரவம் மற்றும் மிக முக்கிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.


இந்நிலையில் ISC அமைப்பு மாஸ்டர் பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனை அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் சத்யன் சூர்யன், என்னை ISC-ல் ஒருவனாக சேர்த்துக் கொண்ட இந்திய ஒளிப்பதிவாளர்களின் சமூகத்துக்கு நன்றி. துறையில் உயர்ந்தவர்களுடன் சேர்ந்து மதிப்புமிக்க இந்த அமைப்பில் அங்கமாக இருப்பது பெரிய கவுரவம். ரவி.கே.சந்திரன், அனில் மேத்தா உள்ளிட்டோருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.இதையறிந்த திரைத்துறையினர் பலரும் சத்யன் சூர்யனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கே.வி.ஆனந்த், சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் படிக்க: பெரிய சம்பளத்துடன் வெப் சீரிஸில் ரீ எண்ட்ரி ஆகும் வடிவேலு?
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading