Mohanlal: சந்தோஷ் சிவன் வெளியிட்ட மோகன்லாலின் பாரோஸ் ஷுட்டிங் ஸ்பாட் படம்!

Mohanlal: சந்தோஷ் சிவன் வெளியிட்ட மோகன்லாலின் பாரோஸ் ஷுட்டிங் ஸ்பாட் படம்!

சந்தோஷ் சிவன் - மோகன்லால்

மோகன்லால் தற்போது பாரோஸ் - கார்டியன் ஆஃப் டி காமாஸ் ட்ரெஷ்ஷர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    மோகன்லால் தற்போது பாரோஸ் - கார்டியன் ஆஃப் டி காமாஸ் ட்ரெஷ்ஷர் என்ற படத்தை இயக்கி வருகிறார். நாற்பது வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பாடகர்... என பன்முகத்துடன் இயங்கும் மோகன்லால் இயக்கும் முதல் படம் இது.

    ஜிஜோ புன்னூஸ் எழுதிய பாரோஸ் - கார்டியன் ஆஃப் டி காமாஸ் ட்ரெஷ்ஷர் நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. படத்தின் திரைக்கதையையும் ஜிஜோ புன்னூஸ் எழுதியுள்ளார். இயக்குநராக தனது முதல் படத்தின் திரைக்கதையை எழுத, மோகன்லால் அனுமதி அளித்த புன்னூஸ் சாதாரண ஆளில்லை. இந்தியாவின் முதல் 70 எம்.எம் திரைப்படமான படையோட்டத்தை இயக்கியவர். அதேபோல் இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தனும் இவரது இயக்கத்தில் வெளியானதே.



    பாரோஸின் படப்பிடிப்பை கேரளா, கோவா, தேராடூன் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இடங்களில் நடத்த மோகன்லால் திட்டமிட்டுள்ளார். இதில் பிருத்விராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் இயக்குநரான லூசிபரில் மோகன்லால் தான் ஹீரோ என்பது முக்கியமானது.

    பாரோஸ் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புதளத்தில் மோகன்லாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்தை, மோகன்லாலின் ஆஸ்தான படநிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த ஃபேன்டஸி திரைப்படத்தை தயாரிக்கிறார்.

    கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதே தீவிரத்துடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மோகன்லால்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: