’இந்தியன் 2’ படத்தின் பிரமாண்ட செட்?...வெளியான வைரல் புகைப்படம்

இந்தியன் 2 படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

news18
Updated: December 30, 2018, 3:55 PM IST
’இந்தியன் 2’ படத்தின் பிரமாண்ட செட்?...வெளியான வைரல் புகைப்படம்
இந்தியன் படத்தில் கமல்ஹாசன்
news18
Updated: December 30, 2018, 3:55 PM IST
’இந்தியன் 2' படத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவும் , வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இந்தியன் தாத்தாவாக பதிவானது.

இந்தியன் படத்திற்குப் பிறகு 22 வருடங்களாக கமல்ஹாசனும் - சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் 2.0 படத்தை அடுத்து இயக்குநர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சங்கர் அறிவித்தார். முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்‌ஷனுக்கு கைமாறியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.


கடந்த நவம்பர் 12-ம் தேதி படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் துவங்கியது. இதை படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்துக்காக அமைக்கப்பட்ட செட்டில் சங்கர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த செட் பழங்கால தோற்றத்தில் தத்ரூபமாக அமைந்துள்ளது.

Loading...
படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும் படம் 2020-ம் ஆண்டு வெளியாகும் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இந்தியன் 2 படம்தான் தனது கடைசி படம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 
View this post on Instagram

 

A post shared by Ravi Varman (@r_varman_) on


எச்.ஐ.வி தொற்று ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு - வீடியோ

First published: December 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...