• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Suriya 40: சூர்யா படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

Suriya 40: சூர்யா படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

சூர்யா 40

சூர்யா 40

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

  • Share this:
    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார், படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

    பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. இதனால் தற்காலிகமாக, சூர்யா40 என இப்படம் அழைக்கப்படுகிறது. ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜுலை 13-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதி செய்துள்ளார். ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டிருப்பவர், இதுவொரு நீண்ட ஷெட்யூல்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

    சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, காரைக்குடி பகுதிகளில் நடந்தது. இந்த ஷெட்யூல்ட் காரைக்குடியில் நடப்பதாக கூறப்படுகிறது. எனினும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை ரத்னவேலு குறிப்பிடவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: