’இந்தியன் 2’ படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றம்?

சுதந்திரதினமான இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றம்?
இந்தியன் 2
  • News18
  • Last Updated: August 15, 2019, 7:42 PM IST
  • Share this:
இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் சங்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சுதந்திரதினமான இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டரை இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான போஸ்டரில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் பெயர் இடம்பெற்றது.


ஆனால் அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிய உள்ளதால் அவருக்குப் பதிலாக இந்தியன் 2 படத்தில் ரத்னவேலு இடம்பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சேது, நந்தா, ஜெயம், திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன், லிங்கா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.பார்க்க: நேர்கொண்ட பார்வை எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்தது: பிரபல நடிகை புகழாரம்!

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்