Johny Lal: பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மறைவு - நடிகர் மாதவன் இரங்கல்

Johny Lal: பிரபல ஒளிப்பதிவாளர் திடீர் மறைவு - நடிகர் மாதவன் இரங்கல்

மாதவன் - ஜானி லால்

பிரபல இந்தி மற்றும் கன்னடப்பட ஒளிப்பதிவாளர் ஜானி லால் திடீர் மரணமடைந்துள்ளார். நடிகர் மாதவன் ட்விட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பிரபல இந்தி மற்றும் கன்னடப்பட ஒளிப்பதிவாளர் ஜானி லால் திடீர் மரணமடைந்துள்ளார். நடிகர் மாதவன் ட்விட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜானி லால் இருபதுக்கும் அதிகமான கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உபேந்திராவின் சூப்பர் ஹிட் படமான சூப்பருக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் தனது ’மின்னலே’ படத்தை 2001-ல் ’Rehnaa Hai Terre Dil Mein’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார். இதில் மாதவன், தியா மிர்சா, சயிப் அலிகான் உள்பட பலர் நடித்தனர். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு ஜானி லால் ஒளிப்பதிவு செய்திருந்தார்.



    கன்னட - இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
    துயரங்கள் தொடர்கின்றன. நாம் ஒரு அற்புதமான மனிதரை இழந்திருக்கிறோம். உங்களின் கண்ணியம், கருணை, புத்திசாலித்தனம் அனைத்தையும் நாங்கள் இழந்துள்ளோம். Rehnaa Hai Terre Dil Mein படத்தில் எங்களின் ஆன்மாவை அழகாக கொண்டு வந்தீர்கள். இதயம் நொருங்கிப் போயுள்ளது என்று மாதவன் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

    கொரோனா காலத்தில் திரையுலக பிரபலங்களை நாடு தொடர்ச்சியாக இழந்து வருகிறது. இது பேரிடர் காலம் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: