• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது-இயக்குநர் வெற்றிமாறன்

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது-இயக்குநர் வெற்றிமாறன்

ஒளிப்பதிவு  சட்ட 
திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் சினிமா சமூக நீதிக்காக பெரிய அளவில் உதவியிருக்கிறது. சினிமா சமூகத்தில் இருக்கும் முரண்களை, பிரச்சனைகளை பேச, மக்களிடம் எடுத்து செல்லக் கூடிய ஒரு ஆயுதமாக இருக்கிறது

  • Share this:
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது எனவும், இதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைப்பட தணிக்கை சட்டத்திருத்த எதிர்ப்பு இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.இக்கருத்தரங்கில் எழுத்தாளர்கள், திரைத்துறை கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்து இச்சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:  ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, மிகவும் ஆபத்தானது. இது கலைஞர்களின் கற்பனை திறனையும், சிந்தனை ஓட்டத்தையும் பாதிக்கக்கூடியது.

என்ன நினைக்கிறார்களோ அது மட்டுமே, சினிமாவில் இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். வலதுசாரி சிந்தனை, வலதுசாரி அரசியல் பேசக் கூடிய படங்கள் மட்டுமே வெளியாக கூடிய நிலை ஏற்படும். சினிமா அனைத்து மக்களுக்கானது.

தமிழகத்தில் சினிமா சமூக நீதிக்காக பெரிய அளவில் உதவியிருக்கிறது. சினிமா சமூகத்தில் இருக்கும் முரண்களை, பிரச்சனைகளை பேச, மக்களிடம் எடுத்து செல்லக் கூடிய ஒரு ஆயுதமாக இருக்கிறது.மேலும், அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இத்தகைய சட்டம் இத்துறையை பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.எவையெல்லாம் ஆட்சேபனை இல்லாமல் இருக்கிறதோ, அதை மட்டும் எடுக்கக் கூடிய சூழல் ஏற்படும். இது மிகத் தீமையானதுஎனவே, அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: