ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 - தமிழக அரசு தலையிட திரைத்துறையினர் கோரிக்கை

முதல்வருடன் திரைத்துறையினர் சந்திப்பு

நடிகர் சூர்யா, இயக்குநர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், அமீர் உள்பட ஏராளமானவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 • Share this:
  மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு விஷயத்தில், தமிழக அரசு தலையிட வேண்டும் என நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.

  திரைப்படங்களுக்கான உரிமைகளை மத்திய அரசு ஒவ்வொன்றாக கத்தரித்து வருகிறது. சமீபத்தில் தணிக்கை மறுசீராய்வு தீர்ப்பாயம் கலைக்கப்பட்டது. இதனால், தணிக்கைச் சான்று மறுக்கப்படும் திரைப்படங்கள் மறுசீராய்வு தீர்ப்பாயத்தை நாடுகிற வசதி ஒழிக்கப்பட்டு நீதிமன்றங்களை மட்டுமே திரைப்படங்கள் நாட முடியும் என்ற நிலை உருவானது. இந்நிலையில், அதற்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021.

  இதன்படி, தணிக்கைக்குழு சான்றளித்த ஒரு படத்தை மத்திய அரசு நினைத்தால் மறு தணிக்கைக்கு உட்படுத்த முடியும். அதன் சான்றிதழை மாற்றிமையக்கவும், தேவைப்பட்டால் படத்தை தடை செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது படைப்பாளியின் சுதந்திரத்தை பறிக்கிற செயல் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா, இயக்குநர்கள் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், அமீர் உள்பட ஏராளமானவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர்கள் ராஜசேகர், கற்பூர செந்தூர பாண்டியன் உள்ளிட்டவர்கள் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். திரைத்துறையின் கருத்து சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க தமிழக அரசு இதில் தலையிட்டு ஆதரவளிக்க வேண்டும் என தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: