• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கேரள திரையரங்குகளை காப்பாற்றும் ஆங்கில, தமிழ்ப் படங்கள்!

கேரள திரையரங்குகளை காப்பாற்றும் ஆங்கில, தமிழ்ப் படங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மோகன்லாலின் படம் வெளிவந்தால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள், நல்ல ஓபனிங் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த திரையரங்குகள் ஏமாற்றமடைந்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கேரளாவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் படங்களை திரையிட அரசு அனுமதித்துள்ளது. இதனால் கேரளாவில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களின் வருகைக்காக தயாராகத் தொடங்கியுள்ளன.

திரையரங்குகளில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்ற உறுதியுடன் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படம் முடிந்தும் வெளியிடாமல் இருந்தனர். உதாரணமாக, மோகன்லாலின் மரக்கார் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் படம்.

திரையரங்குகள் திறக்க இன்னும் ஒரு வருடமானாலும், என் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்றார், இந்தப் படத்தின் இயக்குனர் ப்ரியதர்ஷன். அதேபோல் மோகன்லால் நடித்துள்ள ஆறாட்டு படமும் வந்தால் திரையரங்கு என்பதில் பிடிவாதமாக உள்ளது. இதேபோல் பல படங்கள்.

துரதிர்ஷடவசமாக இந்தப் படங்கள் எதுவும் உடனே வெளியாகும் போல் தெரியவில்லை. மோகன்லாலின் படம் வெளிவந்தால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள், நல்ல ஓபனிங் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த திரையரங்குகள் ஏமாற்றமடைந்துள்ளன. வரும் 28 ஆம் தேதி ஆங்கிலப் படங்களான நோ டைம் டூ டை, வெனம் 2 ஆகிய படங்கள் வெளியாகின்றன.

Also read... அமலாவின் மகன் நடிக்கும் படத்தில் மம்முட்டி...!

அத்துடன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் வெளியாகிறது. அதற்கடுத்த நாள் 29 ஆம் தேதி தெலுங்கில் சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற சாய் பல்லவி, நாக சைதன்யா நடித்த சேகர் கம்முலாவின் லவ் ஸ்டோரி திரைப்படம், பிரேம தீரம் என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது

இந்த நான்குப் படங்களையே கேரள திரையரங்குகள் அதிகம் நம்பியுள்ளன. இத்துடன் ஜோஜு ஜார்ஜ், பிருத்விராஜ், ஷீலு ஆப்ரஹாம் நடித்த ஸ்டார் திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில சின்ன பட்ஜெட் மலையாளப் படங்கள் வெளியாகலாம். ஆனாலும் நாம் முன்பு குறிப்பிட்ட நான்கு படங்களையே கேரள திரையரங்குகள் அதிகம் நம்பியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: