பட வாய்ப்புகள் இல்லாததால் வருமானத்தை இழந்த பிரபல தமிழ் நடிகை, வீடு வீடாக சென்று சோப் விற்பனை செய்து வருவதாகவும், ஒருவேளை மட்டுமே உணவு உண்பதாகவும் கூறியுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஹவுஸ்ஃபுல், ஜனா, வேல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஷ்வர்யா பாஸ்கரன். இவரது பெயர் தெரியாவிட்டாலும் கூட, சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிந்த முகமாக ஐஷ்வர்யா பாஸ்கரன் இருந்து வருகிறார். டிவி தொடர்களிலும் ஐஷ்வர்யா பாஸ்கரன் நடித்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை, பட வாய்ப்புகள் இல்லாமல் போனது உள்ளிட்டவற்றால், பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் ஐஷ்வர்யா, தன்னுடைய நிலைமை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், மோசமான நிலையில் இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லை எனக்கு பொருளாதாரமும் இல்லை, அதனால் ஜாலியாக சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க - சுருள் முடியில் சொக்க வைக்கும் ரித்திகா சிங்..
நான் ஆடம்பரமான ஆள் கிடையாது. பட்டுப்புடவை உடுத்த மாட்டேன். யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும்.
நான் பிழைத்தது டிவி சீரியலை வைத்துத் தான் சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது.
இப்போது கூட கடன் இல்லை. வேறு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் வேலை இல்லை, நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை. நான் பெருமைப்படுகிறேன். எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக செல்லுவேன்.
இதையும் படிங்க - விக்ரம் படக்குழுவினரின் மேல் முத்த மழை பொழிந்த கமல்ஹாசன்..
இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரபலமாக இருந்த நடிகைக்கே இந்த நிலைமையா என்று இவரது பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood