Home /News /entertainment /

ஓடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்தால் சினிமா டிக்கெட் இலவசம்!

ஓடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்தால் சினிமா டிக்கெட் இலவசம்!

ஓடிடி

ஓடிடி

புதிய படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாவதில்லை. எண்பது சதவீத படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு முதல் நான்கு வாங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகின்றன.

நாளுக்குநாள் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்க, ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெட்பிளிக்ஸ், ஆப்பிள், சோனிலிவ், அமேசான் பிரைம் வீடியோ, ஸீ 5, டிஸ்னி + ஹாட் ஸ்டார், வூட், ஆஹா, சன் நெக்ஸ்ட் என தேவைக்கு அதிகமான ஓடிடி தளங்கள் உள்ளன. இதில் கூடுதலாக ஒரு ஓடிடி தளம் ஜனவரி 15 தொடங்கப்படுகிறது.

எமோஷனல் என்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் யுஎஸ்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெருநிறுவனம். இவர்கள் தியேட்டர்கூட்ஸ் என்ற பெயரில் ஓடிடி தளத்தை தொடங்குகின்றனர். ஜனவரி 15 முதல் இந்த ஓடிடி தளம் உலக அளவில் இயங்க உள்ளது.

Also Read - ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

இந்த ஓடிடி தளத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி திரைப்படங்கள், வெப் தொடர்களுடன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்கள், வெப் தொடர்களும் இடம்பெற உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் இசை நிகழ்ச்சிகள் என பல உள்ளடக்கங்களை கொண்டதாக இந்த ஓடிடி தளம் இருக்கும்.

நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

புதிய படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாவதில்லை. எண்பது சதவீத படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு முதல் நான்கு வாங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகின்றன. அந்த இடைவெளியை நிரப்பும் விதமாக தங்களின் சந்தாதாரர்களுக்கு இலவசமாக புதிய படங்களின் டிக்கெட்களை அளிக்கவும் இந்த ஓடிடி தளம் முடிவு செய்துள்ளது. இதேபோல் பல அதிரடி ஆஃபர்களையும் இந்த புதிய ஓடிடி தளம் அளிக்க உள்ளதாக இந்திய வர்த்தகப் பிரிவுத் தலைவர் பிரசாத் வசீகரன் கூறியுள்ளார்.
ஓடிடி தள ரசிகர்களுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி