Home /News /entertainment /

இரவின் நிழல் பார்த்திபனுக்கு 14 கேள்விகளை அடுக்கிய புளூ சட்டை மாறன்… பதிலை எதிர்பார்ப்பதாக அறிவிப்பு

இரவின் நிழல் பார்த்திபனுக்கு 14 கேள்விகளை அடுக்கிய புளூ சட்டை மாறன்… பதிலை எதிர்பார்ப்பதாக அறிவிப்பு

புளூ சட்டை மாறன் - பார்த்திபன்

புளூ சட்டை மாறன் - பார்த்திபன்

Parthiban Blue Sattai Maran : பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் 2013-ல் வெளியான Fish & Cat படம்தான் உலகின் முதல் Non Linear Single shot திரைப்படம் என்று கூறியுள்ளார்.

    இரவின் நிழல் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபனுக்கு 14 கேள்விகளை சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் எழுப்பியுள்ளார். இதற்கான பதிலை பார்த்திபனிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருப்பதாக மாறன் குறிப்பிட்டுள்ளார்.

    மாறனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக பார்த்திபனுக்கும் – மாறனுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வந்துள்ள நிலையில், தன்னுடைய கேள்விகளை தொகுத்து அளித்திருக்கிறார் மாறன்.

    இரவின் நிழல் படத்தை கடந்த வெள்ளியன்று வெளியிட்ட பார்த்திபன், அதனை உலகின் முதல் Non Linear single shot திரைப்படம் என்று கூறி வருகிறார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் 2013-ல் வெளியான Fish & Cat படம்தான் உலகின் முதல் Non Linear Single shot திரைப்படம் என்று கூறினார்.

    அத்துடன், ஆதாரமாக Variety.com இணைய தளத்தின் விமர்சனத்தை தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இரவின் நிழல் படம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு  வந்த நிலையில், புதுவையில் புளூ சட்டையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.



    இதை பார்த்திபன் ரசிகர்கள் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபனுக்கு 14 கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பதாக புளூ சட்ட மாறன் கூறியுள்ளார்.

    பார்த்திபனுக்கான கேள்வி மலர் என தலைப்பிட்டு மாறன் எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு –











    இவ்வாறு மாறன் தனது பதிவில் கூறியுள்ளார்.

     
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி