பெரும்பாலான மாநிலங்களில் தியேட்டர்கள் திறப்பு: திரையிடப்பட்ட படங்களின் பட்டியல்..

இந்தியா முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே வெளியான படங்களே அதிகம் திரையிடப்பட்டுள்ளன. 

பெரும்பாலான மாநிலங்களில் தியேட்டர்கள் திறப்பு: திரையிடப்பட்ட படங்களின் பட்டியல்..
திரையரங்கு
  • Share this:
தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் இன்று திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ள போதும் தமிழக அரசு திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று இந்தியா முழுவதும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் வெளியாகி உள்ளது. விவேக் ஓபராய், மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் இந்தியாவின் பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களையே பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மறுமுறை திரையிட்டுள்ளனர்.

அதில் குறிப்பாக ஓம் ராவத் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சயிப் அலிகான், கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற ‘தன்ஹாஜி’ திரைப்படத்தை திரையிட இந்தியா முழுவதும் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் .


ரூ.150 கோடி பொருட்செலவில் உருவாகிய இந்த திரைப்படம் ரூ.400 கோடி வரை வசூலித்து இருந்ததால் இந்த திரைப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்புகின்றனர். இதேபோல அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘மலங்’ திரைப்படமும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மறுமுறை திரையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 'நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.. அனுபவமே பாடம்..’ - ரஜினி ட்வீட்

அண்மையில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத அன்பை அறுவடை செய்யும் வகையில் சுஷாந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கேதர்நாத்’ திரைப்படமும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதானமாக திரையிடப்பட்டுள்ளது. மேலும் கணவன் மனைவி இடையிலான உறவை மையமாக வைத்து இந்த ஆண்டின் துவக்கத்தில் டாப்ஸி நடிப்பில் வெளியான ‘தப்பட்’ திரைப்படமும், ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ‘வார்’ திரைப்படங்களும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளன.தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் பெரும்பாலான திரையரங்குகளில் ஆங்கில திரைப்படங்களே திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட 3டி திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியான தில் பஜரா, சதக் 2 உள்ளிட்ட திரைப்படங்களை திரையில் ஒளிபரப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் பிவிஆர் உள்ளிட்ட திரையரங்குகள் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading