நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும், இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.
மேலும் படிக்க: விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னர் அசத்தல் நடனம்!
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அஜித்தின் புகைப்படங்களும் வெளியாக ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து #ValimaiFirstSingle , #30YearsOfAjithKumar ஆகிய ஹேக்டேக்கை ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினர்.
இதையும் படிங்க: சாண்டி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா டான்ஸ் ... ட்ரெண்டாகும் பழைய வீடியோ..
இரவு 10.45 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 3 நிமிடங்கள் தாமதமாக ‘ நாங்க வேற மாதிரி’ என்னும் வலிமை படத்தின் பாடல் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.