கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' பட ட்ரெய்லர் ரிலீஸ்

கொரோனாவால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் உலகம் முழுக்க ஒரே நாளில் இத்திரைப்படம் திரைக்கு வருமா என்ற கேள்வியும் எழுகிறது

  • Share this:
டெனட் படத்தின் ட்ரெயலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற இயக்குநராக அறியப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் வெளியான மொமெண்டோ, இன்ஷெப்சன், இண்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் தனது வித்தியாசமான திரைப்படைப்புகளால் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.

இந்நிலையில் டன்கிரிக் படத்தை அடுத்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலு இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.


டெனட் படம் ஜூலை 17-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் உலகம் முழுக்க ஒரே நாளில் இத்திரைப்படம் திரைக்கு வருமா என்ற கேள்வியும் எழுகிறது.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading