ஹாலிவுட்டில் பெயர் சொல்லும் இயக்குனர்களில் கிறிஸ்டோபர் நோலனும் ஒருவர். திரைப்படத்திற்கு திரைப்படம் புதிதாக எதையாக முயற்சி செய்ய விரும்புவர். 1998 ஆம் ஆண்டு ’ஃபாலோவிங்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ’இன்சோம்னியா’ , ‘ தி டார்க் நைக்’ , ‘இன்செப்ஷன்’ என பல பெயர் சொல்லும் படங்களை கொடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் தற்போது ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற படத்தை இயக்கிவுள்ளார். இந்த திரைப்படம் அமெரிக்கன் தத்துவார்த்த இயற்பியலாளரான ( theoretical physicist ) ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரை பற்றியது. இவர் இரண்டாம் உலக போரின் போது முதல் அணு ஆயுதங்களை உருவாக்கியத்தில் முக்கிய பங்காற்றியவர்.இந்த திரைப்படம் ஒரு பயோக்கிராஃபி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் ஹீரோவாக ‘சிலியன் முர்ஃபி’ நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜூலை 21, 2023 -ல் திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.