Home /News /entertainment /

பிக் பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்துக்கு கடும் எதிர்ப்பு

பிக் பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்துக்கு கடும் எதிர்ப்பு

Holy Wound திரைப்படம்

Holy Wound திரைப்படம்

காதல் என்று வரும்போது அதற்கு பாலினம் முக்கியம் இல்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தான் கடத்த முயன்றுள்ளதாக இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மலையாளத்தில் உருவாகியிருக்கும் ’ஹோலி ஊண்ட்’ என்ற லெஸ்பியன் படத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

    மலையாள 'பிக் பாஸ்' போட்டியாளர் ஜானகி சுதீர் மற்றும் அமிர்தா வினோத் நடிப்பில் லெஸ்பியன் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப் படமான ’Holy Wound’, ஆகஸ்ட் 12-ம் தேதி OTT தளமான SS Frames-ல் வெளியாக உள்ளது. அசோக் ஆர்.நாத் இயக்கிய இத்திரைப்படம், சிறுவயதிலிருந்தே காதலித்து, பின்னர் பிரிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட இரண்டு இளம் பெண்களின் கதையை சித்தரிக்கிறது.

    சஹஸ்ராரா சர்வதேச திரைப்பட விழா, காஷிஷ் மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா மற்றும் ஃபிரேம்லைன் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச LGBTQ திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. காதல் என்று வரும்போது அதற்கு பாலினம் முக்கியம் இல்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தான் கடத்த முயன்றுள்ளதாக இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார்.



    விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணும், வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படும் இன்னொரு பெண்ணும் ஒரு கட்டத்தில் லெஸ்பியனாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை என்பதை ட்ரைலரில் இருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது. இது கேரளாவில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    தேசியக்கொடியை ட்விட்டர் புரொபைல் பிக்சராக மாற்றிய ரஜினிகாந்த்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கன்னியாஸ்திரி லெஸ்பியனாக மாறுவது போல கதை உள்ளதால், அதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி