• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல இயக்குனரின் படப் பெயருக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு...!

பிரபல இயக்குனரின் படப் பெயருக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு...!

 இயக்குனர் நாதிர்ஷா

இயக்குனர் நாதிர்ஷா

பிரபல இயக்குனர் நாதிர்ஷா ஈஷோ என்ற பெயரில் ஒரு படம் இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
படத்தின் பெயருக்கு, காட்சிக்கு, கதைக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். அதுவும் மதம் சம்பந்தப்படும் போது எதிர்ப்புகள் உக்கிரமாக இருக்கும். ஆனால்,கேரளாவில் எதிர்ப்பு வருவதுதான் ஆச்சரியம்.

முஸ்லீம்கள் மசூதிகளில் ஆயுதம் பதுக்கி வைக்கிறார்கள், குண்டு வெடிப்பை நடத்துகிறார்கள் என சகட்டுமேனிக்கு மலையாளத்தில் படங்கள் வந்துள்ளன. முஸ்லீம்கள் இவற்றை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நஸ்ரானி என்பது சிரியன் கிறிஸ்தவர்களை குறிக்கும் மென் கெட்டவார்த்தை. நஸ்ரானி என்ற பெயரிலேயே ஒரு படம் வெளிவந்தது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் . . யோ. படம்கூட இயேசு, மரியா யோசேப்பு என்பதன் சுருக்கமே. அதற்கும் எதிர்ப்பில்லை. ஆனால், ஈஷோ என்று பெயர் வைத்ததற்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆச்சரியம்.

Also read... ஷங்கரின் பான் - இந்தியா படத்தில் அஞ்சலி...!

பிரபல இயக்குனர் நாதிர்ஷா ஈஷோ என்ற பெயரில் ஒரு படம் இயக்குகிறார். ஈஷோ என்பது கடவுளை குறிக்கும் சொல். இதை படத்துக்கு வைப்பது கடவுளை அவமதிப்பது போல என்று ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், யார் எதிர்த்தாலும் படத்தின் பெயரை மாற்றப் போவதில்லை, படம் வந்தால், இதற்கா எதிர்ப்பு தெரிவித்தோம் என எதிர்ப்பு தெரிவித்தவர்களே வெட்கிப் போவார்கள் என நாதிர்ஷா கூறியுள்ளார்.  நஸ்ரானியை அனுமதித்த தேசத்தில் ஈஷோவுக்கு எதிர்ப்பு என்பது ஒருசிலரின் அறியாமையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: