ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் Exclusive வீடியோ வெளியீடு!

தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் Exclusive வீடியோ வெளியீடு!

தி க்ரே மேன்

தி க்ரே மேன்

படத்தின் நாயகர்களான ரயன் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் மோதும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ளது. வருகிற 22ம் தேதி தி கிரே மேன், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் படத்தின் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

Also read... வீட்ல விசேஷம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது...!

அதனை தொடர்ந்து தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடினர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

' isDesktop="true" id="755948" youtubeid="6q93pzTw2rY" category="cinema">

இந்நிலையில் தற்போது படத்தின் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகர்களான ரயன் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் மோதும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ளது. வருகிற 22ம் தேதி தி கிரே மேன், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush, Entertainment, Hollywood